Verbs in English | ஆங்கில வினைச்சொற்கள்

ஆங்கில மொழியில் ஒரு வினைச்சொல் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என இன்று பார்ப்போமா?


அவை ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:

  • 1. Base Form
  • 2. Progressive Form
  • 3. Third Person Form
  • 4. Past Form
  • 5. Past Participle Form

எடுத்துக்காட்டு:

"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள்  ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.

மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
FormsVerbs
Base Formdogospeakplay
Progressive Formdoinggoingspeakingplaying
Third Person Formdoesgoesspeaksplays
Past Formdidwentspokeplayed
Past Participle Formdonegonespokenplayed

1. "Base Form" என்பது அடிப்படை வினை வடிவமாகும். இவைகளே வினைச்சொல் வடிவங்களில் முதன்மையானவை.

எடுத்துக்காட்டாக:
  • do 
  • go
  • play
2. "Progressive Form" என்பது அடிப்படை வினைச் (base form) சொற்களுடன் "ing" யும் இணைந்து பயன்படுபவைகள் ஆகும். இதனை "Present Participle Form" என்றும் அழைப்பர்.

எடுத்துக்காட்டாக:
  • do  - doing
  • go - going
  • play - playing
3. "Third Person Form" என்பது சாதாரண நிகழ்காலத்தின் மூன்றாம் நபர் ஒருமை வினைச்சொற்களாகப் பயன்படுபவைகள் ஆகும். அதாவது "Base Form" உடன் "s, es" போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படுபவை.

எடுத்துக்காட்டாக:
  • do - does
  • go - goes
  • speak - speaks
மேலும் அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/es) பார்க்கலாம்.

4. "Past Form" என்பது ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாக பயன்படும் வினைச்சொற்களாகும். இதில் ஒழுங்கு வினைகள் (Regular Verbs), ஒழுங்கமையா வினைகள் (Irregular Verbs) என இரண்டு வகைகள் உள்ளன. ஒழுங்கு வினைகளின் போது "ed" இணைந்து பயன்படும்.

எடுத்துக்காட்டாக:
  • play - played
  • allow - allowed
  • boil - boiled 
அதேவேளை ஒழுங்கமையா வினைகளின் (Irregular Verbs) போது, சொற்கள் வடிவம் ஒழுங்குமுறையின்றி காணப்படும்; அதனாலேயே அவற்றை ஒழுங்கமையா வினைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:
  • go - went
  • do - did
  • buy - bought 
இவற்றை நீங்கள் அட்டவணை (Irregular verbs)ல் பார்க்கலாம்.

5. "Past Participle Form" இதுவும் Past Form போன்றே ஒழுங்கு வினைகளாக (Regular Verbs) உள்ளவைகளும் உள்ளன; ஒழுங்கமையா வினைகளாக உள்ளவைகளும் உள்ளன. இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக:
  • go - gone
  • do - done
  • eat - eaten 
இவ்வாறு ஆங்கிலத்தில் மொத்தம் ஐந்து வினைச்சொல் வடிவங்கள் உள்ளன.

இவற்றை மேலும் விரிவாக தொடர்புடைய பாடங்களில் கற்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

https://t.me/aaangilam

0 Comments