First Person (தன்மை) | Grammar Pattern - 1

இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன்  ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் அனைத்து "Grammar Patterns" களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

எடுத்துக்காட்டாக, "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால், "நான் ஒரு வேலை செய்கின்றேன்." என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை." என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் விளக்கத்தையும் எளிதாக விளங்கிக் கற்கலாம் என்பது எமது கருத்தாகும்.


சரி பாடத்திற்குச் செல்வோம்.

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.

do a job

1. do a Job.
நான் செய்கிறேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7.  Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய் யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய் முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to  do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job. 
[சற்றுமுன்பிருந்து - தற்போதுவரை] எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
[அக்காலத்திலிருந்து - ஒரு கட்டம்வரை] எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)

33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)

35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44.  I need to do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.

45. I needn't to do a job.
45. I don't need to do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.

51.
 Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.

52.
 It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53.
 I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54.
 I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55.
 I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56.
 To do a job, I am going to go to America.
செய்வதற்கு ஒரு வேலை, நான் போகப் போகின்றேன் அமெரிக்காவுக்கு.


57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.

58.
 Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?

59.
 Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.

60.
 I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61.
 I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62.
 I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63.
 I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.

64.
 I have been doing a job.
நான் [அன்றிலிருந்து - தற்போதுவரை] செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

65.
 I had been doing a job.
நான் [அன்றிலிருந்து - ஒரு கட்டம்வரை] செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

66.
 I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67.
 I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68.
 I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69.
 I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.

70.
 If I do a job, I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை, எனக்கு கிடைக்கும் அனுபவம்.

71.
 If I don't do a job, I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை, எனக்கு கிடைக்காது அனுபவம்.

72.
 If I had done a job, I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை, எனக்கு கிடைத்திருந்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)

73.
 It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.

கவனத்திற்கு:

எடுத்துக்காட்டாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில், "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது அவ்விடங்களிலெல்லாம் பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைத்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் பிரதான வினைச் சொல்லுடன் " ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Homework:

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது சத்தமாக வாசித்து வாசித்து எழுதிப் பயிற்சி செய்யுங்கள். அதுவே எளிதாக உங்கள் மனதில் பதியக் கூடியதாக இருக்கும்.

1. I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
3. I play cricket.
நான் விளையாடுகிறேன் துடுப்பாட்டம்.
4. I fill up the form.
நான் நிரப்புகிறேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.
8. I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகிறேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகிறேன் ஒரு உந்துருளி.

கவனிக்கவும்

உதாரணமாக "speak in English " எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால், அதை:

I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.

I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.

I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.

I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.

என (மேலே எடுத்துக்காட்டியுள்ளதைப் போன்று) அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Long Forms = Short Forms

do + not = don’t
does + not = doesn’t
did + not = didn’t
will + not = won’t
was + not = wasn’t
were + not = weren’t
can + not = can’t
could + not = couldn’t
have + not = haven’t
has + not = hasn’t
had + not = hadn’t
need + not = needn’t
must + not = mustn’t
should + not = shouldn’t
would + not = wouldn't


மற்றும் இப்பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசைக் கிரமத்தில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுகள் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாக கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்கு குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பை சொடுக்கி குறிப்பிட்டப் பாடத்திற்கு செல்லலாம். பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு பாடங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிதக்கோப்புகளை சொடுக்கி பயிற்சி பெறுங்கள்.

இந்த கிரமர் பெட்டன்களைத் தவிர, மேலும் சில கிரமர் பெட்டன்கள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.


நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

"ஆங்கில இலக்கணம்" என்றவுடன், அது கடினம் எனக் கருதாமல், மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். அவை உங்கள் மனதில் பதியும் வண்ணம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தில் "Well Begun is Half Done!" என்பர், அதன் பொருள் "எதனையும் முறையாக ஆரம்பித்து விட்டாலே பாதி வெற்றி" என்பதுதான். எனவே இந்த முதல் பாடமே உங்களுக்கான சிறந்த ஆரம்பமாக இருக்கட்டும்! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை அச்சமின்றி சத்தமாகப் பேசி பயிற்சி செய்யுங்கள். அதுவே கூடிய விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை உங்களுக்கு வழங்கும்.

மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான ஓர் பயிற்சி முறையாகும்.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்!

மீண்டும்  அடுத்த பாடத்தில்  சந்திப்போம்!

எமது இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும்  எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

1 Comments