ஆங்கில மொழியில் ஒரு வினைச்சொல் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என இன்று பார்ப்போமா?
அவை ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:
- 1. Base Form
- 2. Progressive Form
- 3. Third Person Form
- 4. Past Form
- 5. Past Participle Form
எடுத்துக்காட்டு:
"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.
மேலும் சில எடுத்துக்காட்டாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.
| Forms | Verbs | ||||
| Base Form | do | go | speak | play | |
| Progressive Form | doing | going | speaking | playing | |
| Third Person Form | does | goes | speaks | plays | |
| Past Form | did | went | spoke | played | |
| Past Participle Form | done | gone | spoken | played | |
1. "Base Form" என்பது அடிப்படை வினை வடிவமாகும். இவைகளே வினைச்சொல் வடிவங்களில் முதன்மையானவை.
எடுத்துக்காட்டாக:
- do
- go
- play
எடுத்துக்காட்டாக:
- do - doing
- go - going
- play - playing
எடுத்துக்காட்டாக:
- do - does
- go - goes
- speak - speaks
4. "Past Form" என்பது ஆங்கிலத்தின் இறந்தக்கால வடிவமாக பயன்படும் வினைச்சொற்களாகும். இதில் ஒழுங்கு வினைகள் (Regular Verbs), ஒழுங்கமையா வினைகள் (Irregular Verbs) என இரண்டு வகைகள் உள்ளன. ஒழுங்கு வினைகளின் போது "ed" இணைந்து பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
- play - played
- allow - allowed
- boil - boiled
எடுத்துக்காட்டாக:
- go - went
- do - did
- buy - bought
5. "Past Participle Form" இதுவும் Past Form போன்றே ஒழுங்கு வினைகளாக (Regular Verbs) உள்ளவைகளும் உள்ளன; ஒழுங்கமையா வினைகளாக உள்ளவைகளும் உள்ளன. இவற்றையும் நீங்கள் அட்டவணை (Irregular Verbs) இல் பார்த்து பயிற்சி செய்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக:
- go - gone
- do - done
- eat - eaten
இவற்றை மேலும் விரிவாக தொடர்புடைய பாடங்களில் கற்போம்.
இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

0 Comments