முற்றுப்புள்ளியின் பயன்பாடுகள்
01. ஒரு வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
I can speak in English.
எனக்கு ஆங்கிலத்தில் பேச முடியும்.
Tamil is a classical language.
தமிழ் ஒரு செம்மொழி.
02. ஆங்கிலச் சொற்களை சுருக்கப்பயன்பாடாக (Abbreviations) எழுத்தில் குறிக்கும் பொழுது இந்த முற்றுப்புள்ளி பயன்படும்.
எடுத்துக்காட்டாக:
Jan.
e.g.
a.m.
p.m.
etc.
03. இணைய முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் திகதி போன்றவற்றை எழுதும் பொழுது இடப்படும் புள்ளியை "முற்றுப்புள்ளி" என்று அழைப்பதில்லை. அதனை "புள்ளி" என்றே அழைக்கவேண்டும். ஆங்கிலத்தில் "dot" என்றழைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக:
aangilam.blogspot.com
arunhk.infoATgmail.com
08.07.2010
குறிப்பு
நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாட்டை Aristophanes of Byzantium என்பவரே கிரேக்க மொழியில் அறிமுகப்படுத்தினார். அவரே முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். அதனைத்தொடர்ந்து அதன் பயன்பாடு மருவி வெவ்வேறு மொழிகளில் இடம் பெறத்தொடங்கின. அவ்வாறே ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் எமது பயன்பாட்டிலும் வந்தடைந்துள்ளது.
இருப்பினும் ஒரு வாக்கியத்தின் முடிவை குறிக்க பயன்படும் முற்றுப்புள்ளிக்கு பதிலாக; யப்பான் சீன மொழிகளில் ஒரு சிறிய வட்டம் "。" இடப்படுகின்றது. (Chinese and Japanese, a small circle is used instead of a solid dot: "。") பாக்கிஸ்தானிய உருது மொழியில் ஒரு சிறிய கிடைக்கோடு இடப்படுகின்றது. (Urdu uses "۔")
ஏனைய நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடுகள் தொடர்ந்து வரும்.
குறிப்பு : உங்களது புரிதலை இலகுபடுத்த, தமிழ் மொழிபெயர்ப்பை ஆங்கில Sentence Pattern போன்றே மொழிபெயர்த்துள்ளோம்.
S+V+O
இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.
நன்றி!
0 Comments