Comma | காற்புள்ளி


"Aristophanes of Byzantium" என்பவர் நிறுத்தக்குறியீடுகளை கண்டுப்பிடித்தக் காலத்தில், வாசிப்போர் உரத்தக்குரலில் சத்தமாக வாசிக்கும் போது இடையிடையே மூச்சுவிட்டு விட்டு வாசிப்பதை அவதானித்த அவர், குறிப்பிட்ட நீண்ட வாக்கியங்களில் இடையிடையே நிறுத்தி (மூச்சுவிட்டு) வாசிப்பதற்காக ஒரு குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.  அது தற்போதைய தோற்றத்தைப் போன்று அல்லாமல் நடுமத்தியில் இடப்படும் ( · ) புள்ளியைப் போன்று இருந்தது. அதுவே அக்காலத்தின் காற்புள்ளியாகும். அதனைத்தவிர அக்காலப்பகுதியில் காற்புள்ளி பயன்படுத்துவதற்கான வேறு எந்த விதிமுறைகளும் இருக்கவில்லை. ஆனால் அன்மைக்காலங்களில், அதாவது அச்சு இயந்திரங்களின் தோற்றத்தின் பின்னரே இதன் முக்கியத்துவம் உணர்ப்பட்டு, இதனை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

Comma

இந்த காற்புள்ளியை இடாமல் விட்டாலோ, இடம் மாறி இட்டாலோ, ஒரு வாக்கியத்தின் பொருள் முற்றாக மாறிவிடும் என்பதில் மிகக் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் முற்றிலும் பிழையான பொருளைத் தந்துவிடும் அபாயமும் உள்ளது. எடுத்துக்காட்டாக கீழுள்ள வாக்கியத்தைப் பாருங்கள்

எடுத்துக்காட்டாக:

"No more freedom."
இனி இல்லை சுதந்திரம்.

"No, more freedom."
இல்லை, அதிகச் சுதந்திரம்.

காற்புள்ளியின் பயன்பாடுகள் 

“காற்புள்ளி” பயன்படுத்தும் விதிமுறைகள் ஒவ்வொரு மொழிக்கும் இடையே சிற்சில மாற்றங்களை கொண்டுள்ளன. ஆங்கிலத்திலும் தமிழிலும் கூட காற்புள்ளி பயன்படுத்துவதில் சிற்சில வேறுப்பாடுகள் உள்ளன. நாம் இங்கே பார்க்கப்போவது ஆங்கில மொழியின் காற்புள்ளி பயன்பாட்டை மட்டுமே ஆகும். இவற்றின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக இலக்கவரிசைப்படி பார்ப்போம்.

இவற்றை எளிதாக விளக்கிக் கற்பிக்கும் வகையில், ஒவ்வொருவரும் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து விளக்கங்களைத் தருகின்றனர். நாம் இங்கே 19 பிரிவுகளாகப் பிரித்து இவற்றைப் பார்ப்போம்.


1. ஒரு வாக்கியத்தில் பயன்படும் பல்வேறு பொருற்களை வரிசையாக எழுதும் பொழுது, அவை ஒவ்வொன்றினையும் வேறுப்படுத்திக் காட்ட காற்புள்ளி இடப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

Apple, orange, mango, pineapple, grapes, jumbo, pears, figs
Tiger, deer, jaguar, horse, zebra, giraffe, donkey, kangaroo

2. ஒரு வாக்கியத்தில் மூன்று அல்லது அதற்கு அதிகமான, கூறுகள் அல்லது பொருற்கள் தனித்தனி சொற்களாகவோ அல்லது கூட்டுச்சொற்களாகவோ இருப்பின், அவற்றை வேறுப்படுத்தி காட்டுவதற்கு காற்புள்ளி இடப்படவேண்டும். (Separate the elements in a list of three or more items.)  அதேவேளை கடைசி இரண்டு சொற்களின் இடையே காற்புள்ளிக்கு பதிலாக “and” பயன்படும்.

My favourite actors are Kamalahasan, Vikaram, Surya, Raguwaran and Prakashraj.
This fruit basket contained apples, grapes and oranges.
Sarmilan is wearing blue jeans, Nike shoes, light green shirt and dark blue cap.

கவனிக்கவும்:

கடைசியாக வரும் சொற்றொடர் நீண்டச் சொற்றொடராக இருப்பின், அவற்றை வாசிப்போர் எளிதாக வாசிக்கும் வண்ணம் "and" க்கு முன்னால் காற்புள்ளி இடலாம்.

எடுத்துக்காட்டாக:

We need to buy books, magazines, video cassettes, and other learning materials for our library.

3. ஒரு வாக்கியத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பெயரெச்சங்கள் பயன்படும் போது காற்புள்ளி இட வேண்டும். (Between three or more adjectives.)

I like old, brown, wooden chair.
Sarmilan is tall, small, skinny and handsome.
He brought an old, blue, Volkswagen car.

4. ஒரு வாக்கியத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட வினையெச்சங்கள் பயன்படும் போதும் காற்புள்ளி பயன்படும். (Between three or more adverbs.)

Sarmilan ran quickly, quietly and effortlessly.

5. ஒரு வாக்கியத்தில் இரண்டு பெயரெச்சங்கள் மட்டும் பயன்படும் போது காற்புள்ளி இடாமல், இடையே "and" இட்டு இடலாம். இருப்பினும் "and" க்கு பதிலாக காற்புள்ளி இடப்படும் இடங்களும் உள்ளன. (For two adjectives.)

It was a short, simple film.
It was a short and simple film. (இவ்வாறும் எழுதலாம்.)

6. மூன்று இலக்கங்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையை இலக்கங்களில் எழுதும் போது காற்புள்ளி இடப்பட வேண்டும்.(To separate the three digits of numbers over 999.) அத்துடன் எண்ணிக்கையில் அதிகமானத் தொகையை மூம்மூன்று இலக்கங்களாகப் பிரித்துக்காட்டவும் காற்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

5,527
3,983,849
89,883,000

கவனிக்கவும்:

இவ்வாறு இலக்கங்களின் இடையே காற்புள்ளி இடப்படும் போது, காற்புள்ளியை அடுத்து இடைவெளி விடப்படுவதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

$4.49
HK$8,550.00

தசம எண்களான சதங்களை வேறுப்படுத்திக்காட்ட காற்புள்ளி இடப்படுவதில்லை; புள்ளி இடப்பட வேண்டும்.

7. விலாசம் எழுதும் போது காற்புள்ளி பயன்படும்.

I am originally from Jaffna, Sri Lanka.
His address is 56 Larch Street, London, NW3 2LK, England.
Chung King Mansion, 36-44 Nathan road, Tsim Sha Tsui, Kowloon, Hong Kong


8. திகதி இடும் போதும் காற்புள்ளி பயன்படும். (இம்முறைமை அநேகமாக அமெரிக்க ஆங்கிலத்திலேயே காணப்படுகின்றது.)

June 21, 2010
Thursday, July 22, 2010
My father was born on November 19, 1942.

கவனிக்கவும்:

திகதி, மாதம், ஆண்டு இவற்றில் ஒன்றைத் தவிர்த்து மிகுதி இரண்டை மட்டுமே இடுவதாயின் காற்புள்ளி இடாதீர்கள். (Don't use a comma if only two elements of the date.)

எடுத்துக்காட்டாக:

My father was born in November 1942.

9. தொழில் தகமைகளுடன் ஒரு நபரின் பெயரை எழுதும் போது, பெயருக்கு அடுத்து காற்புள்ளி இட வேண்டும். தொழில் தகமைகளுக்கான சுருக்கெழுத்துக்களுக்கு இடையேயும் காற்புள்ளி இடப்பட வேண்டும்.

John Kennedy, Ph.D
Saththivel Nirmal, Professor of English
Kanagaraththinam Veluppillai, B.A Hons., Dip.Lib.Sc., Ph.D

10. நேரடி உரையாடல்களை விவரித்து எழுதுவதற்கு, நேர்கூற்று (Direct speech) வாக்கியங்களின் முன்னால் அல்லது பின்னால் காற்புள்ளி பயன்படும்.

She said, “I love you.”
“I love you,” she said.
"I don't think so," she said, "but I can try."

அதேவேளை அயற்கூற்று (Indirect speech) வாக்கியங்களாக எழுதுவதாயின், காற்புள்ளி இடத்தேவையில்லை.

எடுத்துக்காட்டாக:

She told him that she loved him.

11. ஆங்கிலத்தில் நாகரிகமான மரியாதையுடனான வேண்டுகோள் மற்றும் கேள்விகளின் இறுதியில் "please" க்கு முன்பாக காற்புள்ளி பயன்படும்.

Can you help me, please?
Could you send me a email, please?
Send me a email, please.

கவனிக்கவும்:

வாக்கியங்களின் ஆரம்பத்திலேயே "Please" பயன்படுமாயின் காற்புள்ளி பயன்படுத்துவதில்லை.

எடுத்துக்காட்டாக:

Please send me a email.

12. ஆங்கிலத்தில் ஒரு கூற்றைக் கூறிவிட்டு, அது அப்படித்தானே, அது அப்படியில்லைதானே, என கூற்றுடன் இணைத்து வினவும் வினாக்களை "கூற்றிணை வினாக்கள்" (Tag Questions) எனப்படும். அவ்வாறான கூற்றிணை வினாக்களில் காற்புள்ளி பயன்படும்.

You like me, don't you?
You don't love me, do you?
Muththaiya Muralidaran is a Sri Lankan cricketer, isn't he?

13. ஒரு கேள்விக்கான பதிலளித்தலின் போது "Yes, No, Sorry" போன்ற சொற்களை அடுத்து காற்புள்ளி பயன்படும்.

Yes, I can help you.
No, I didn't.
Sorry, I can't.

14. ஒரு கடித்தத்தின் இறுதி பகுதியில் "Sincerely" போன்றச் சொற்களுடன் காற்புள்ளி இடப்படும் வழக்கு சிலரிடம் உள்ளது. ஆனால் அநேகமானோர் இடுவதில்லை. இது பயன்படுத்துவோரின் விருப்பைப் பொருத்ததாகும்.

Sincerely,
Sincerely

15. ஒரு கூட்டு வாக்கியத்தின் இரண்டு தனித்தனி வாக்கியங்களை அல்லது சொற்றொடர்களை இணைக்கின்ற இடைச்சொற்களின் (for, and, nor, but, or, yet, so) முன்னால் காற்புள்ளி பயன்படும். (before a coordinating conjunction to join two independent clauses.)

I want to work as an interpreter, so I am studying English grammar.

Sarmilan wanted to buy a new computer, but he didn't have any money.
The teacher explained his question, yet the student still didn't seem to understand.

கவனிக்கவும்:

கூட்டு வாக்கியத்தின் இரண்டு பகுதிகள் அல்லது சொற்றொடர்கள் ஒரே அளவுடையவைகளாக அல்லது சிறிய வாக்கியங்களாக இருப்பின், காற்புள்ளி இடாமலும் எழுதலாம்.

எடுத்துக்காட்டாக:

Kavitha is kind so she helps people.
Kavitha is kind, so she helps people.

16. ஒன்றை அல்லது ஒருவரை குறித்துக்காட்டி அவரின் அல்லது அதனது தகமை, தன்மை போன்றவற்றை விவரித்துக் கூறுவதற்கு இடையிடையே காற்புள்ளிகள் பயன்படும்.

Sarmilan, the most intelligent student in the class, is always late for school.
The Peruvudaiyar Temple, one of the wonders of the ancient world, is in Tamil Nadu.
Bill Gates, CEO of Microsoft, was the developer of the operating system known as Windows.

17. ஒரு நீண்ட வாக்கியத்தின் முகவுரைப் பகுதியை பிரித்துக் காட்டுவதற்கு, முதல் பகுதிக்கு முன்னால் காற்புள்ளி பயன்படும். (To separate introductory elements.)

As the year came to end, I realised the days were getting shorter.
Rushing to catch the bus, she forgot to take her money purse.
Having mastered the use of the comma, it is important to make it work for you in your writing.

கவனிக்கவும்:

வாக்கியத்தின் முகவுரைப் பகுதி மிகச் சிறியதாக அல்லது ஒற்றைச் சொல்லாக இருந்தால் காற்புள்ளி இடுவதை தவிர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக:

Inside, the house was a total mess.
Shortly, we will be leaving for the playground.

Inside the house was a total mess.
Shortly we will be leaving for the playground.

18. வாக்கிய வினையெச்சங்கள் வாக்கியங்களில் பயன்படும் போது காற்புள்ளிகள் பயன்படும். (வாக்கிய வினையெச்சங்கள் ஒரு வாக்கியத்தின் முழுப் பொருளையே தீர்மாணிப்பவைகளாகும். (obviously, however, unfortunately, in face, surprisingly))

Obviously, I can't do everything.
However, I didn't see him again.
Sadly, the whole building was to crumble.

19. நிபந்தனை வாக்கியங்களின் உட்பிரிவில், வினை முதல் பகுதியாக வந்தால் காற்புள்ளி பயன்படும்.

If I do a job, I will get experience.
If he invited her, she really should go.
If she had time, she might come to the party.

கவனிக்கவும்:

வினைப்பகுதி மாறி வந்தால் கற்புள்ளி பயன்பாடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:

I will get experience if I do a job.
She really should go if he invited her.
She might come to the party if she had time.

இன்றைய பாடம் சற்று நீளமான பாடமாகும். இருப்பினும் இவற்றின் பயன்பாடுகளை அறிந்துக்கொள்ளல் மிக முக்கியமானது. இவற்றின் பயன்பாட்டை சரியாக விளங்கிக்கொண்டால், எளிதாகவும் சரியாகவும் காற்புள்ளியை நாம் பயன்படுத்தலாம். இவை ஆங்கில இலக்கண விதிமுறைகளுக்கும் அவசியமானதாகும்.

தொடர்புடைய இடுகைகள்:



ஏனைய நிறுத்தற்குறிகள் தொடர்பான பதிவுகள் தொடர்ந்து வரும்.




குறிப்பு : உங்களது புரிதலை இலகுபடுத்த, தமிழ் மொழிபெயர்ப்பை ஆங்கில Sentence Pattern போன்றே மொழிபெயர்த்துள்ளோம்.

S+V+O

இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

https://t.me/aaangilam


நன்றி!

0 Comments