There is | "இருக்கிறது"

இன்று "there is" எனும் சொற்றொடரை மையப்படுத்தி, இன்றைய கிரமர் பெட்டனை பார்க்கப் போகின்றோம்


There is + "இருக்கிறதுஎனும் சொற்றொடரை மையப்படுத்திய இன்றைய கிரமர் பெட்டனும், ஏனைய எமது ஆங்கிலம் தளத்தின் கிரமர் பெட்டன்களைப் போன்றே, "There is a book." எனும் ஒரு வாக்கியத்தை, 22 வாக்கியங்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதுஇவற்றையும் நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போல் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் "Well begun is half done!" என்பர்அதுபோல் எமது ஆங்கில பாடப் பயிற்சிகளில் வழங்கப்படும் கிரமர் பெட்டன்களை, நீங்கள் மனப்பாடம் செய்துக்கொண்டாலே பாதி வெற்றி பெற்று விட்டதற்கு சமமாகும்.

நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்வலைத்தளத்திற்கு வருகை தந்தவரானால் எமது பாடப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 01 லிருந்து தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம்அதுவே எளிதாக இப்பாடப்பயிற்சிகளை தொடர வழிவகுக்கும்.
    There is a book.
    இருக்கிறது ஒரு புத்தகம்.
    There is not a book. (isn’t)
    இல்லை ஒரு புத்தகம்.
    There are books.
    இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There are not books. (aren’t)
    இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There can be a book.
    இருக்க முடியும் ஒரு புத்தகம்.
    There can't be a book.
    இருக்க முடியாது ஒரு புத்தகம்.
    There will be a book.
    இருக்கும் ஒரு புத்தகம்.
    There won't be a book.
    இருக்காது ஒரு புத்தகம்.
    There was a book.
    இருந்தது ஒரு புத்தகம்.
    There would have been a book.
    இருந்திருக்கும் ஒரு புத்தகம்.
    There were books
    இருந்தன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There must be a book.
    (நிச்சயமாகஇருக்க வேண்டும் ஒரு புத்தகம்.
    There must have been a book.
    இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)
    There may be a book.
    இருக்கலாம் ஒரு புத்தகம்.
    There may have been a book.
    இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.
    There has to a book.
    இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

    There have to be books.
    இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There should be a book.
    இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.
    There ought to be a book.
    எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

    There has been a book.
    [அன்றிலிருந்து/தற்போது வரை] இருக்கிறது ஒரு புத்தகம்.
    There had been a book.
    [அன்றிலிருந்து/ஒரு கட்டம்வரை] இருந்தது ஒரு புத்தகம்.

    There have been books.
    [அன்றிலிருந்து/தற்போது வரை] இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை)

    Homework:

    There is a book on the table. (3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்.
    (ஒரு புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது.)
    There is an election in the USA .(3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்.
    (அமெரிக்காவில் ஒரு தேர்தல் இருக்கிறது.
    There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்.
    (இந்தியாவில் இரண்டு செம்மொழிகள் உள்ளன/இருக்கின்றன)
    There are 1652 languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 1652 மொழிகள் இந்தியாவில்.
    (இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன)
    There are 6760 languages in the world. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 6760 மொழிகள் உலகத்தில்.
    (உலகத்தில் 6760 மொழிகள் உள்ளன.)
    There are hundreds of vegetable items in the market. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்.
    (சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் உள்ளன.)
    கவனிக்கவும்:

    ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில், 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

    பன்மை வாக்கியங்களை, 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.
குறிப்பு:


Here – இங்கே
There – அங்கே
Here and there – இங்கும் அங்கும்

There is a book. -  இருக்கிறது ஒரு புத்தகம். 

சரிபயிற்சிகளைத் தொடருங்கள்.

இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

https://t.me/aaangilam

நன்றி!

1 Comments

  1. That’s because of|as a outcome of} it prompts gamblers to increase their guess quantities after they lose a specific roulette round. With this strategy, you’re not probably to|prone to} allow the house to gather your whole bankroll. Split– This is 토토사이트 a guess on two adjoining numbers on the felt.

    ReplyDelete